வருவன் என்றால், உழாதும் வருவன் என்றும் பொருள் சுட்டு ஒருபொருள் இருவினைகொள்ளும் எதிர்மறை உம்மையை ‘அன்வாசயம்’ என்பர்.அறம் பொருள்- புலிவிற்கெண்டை- சேர சோழ பாண்டியன்- என வரும் உம்மைத்தொகைகள் ஒன்றற்கொன்று அடை என்னும் விசேடணமாகாது தொகும் என்க. ஒழிந்ததொகையெல்லாம் ஒன்றற்கொன்று விசேடணம் ஆகியே தொகும் என்க. அதுபற்றித் தொல்காப்பியர் ‘இருபெயர் பலபெயர்’ எனச் சூத்திரம் செய்தார். மற்றைக் கற்சுனைக் குவளை இதழ் என்னும் தொகை முதலியன எல்லாம் இருமொழித் தொகையாம் என்க” பிரயோக விவேகம் 23-உரை. யானும் நீயும் என்பனவும், யானும் நீயும் அவனும் என்பனவும் முன்மொழிகள் தொக்கு யான் என்பது திரிந்து யாம் என்று வருதல் ‘ஏகசேடபதத் துவந்துவன்’ என்பதும் அவர் கூறியதே. ‘நீயான் என்னும் உம்மைத் தொகையினும் நீஅவன் யான்எனும் உம்மைத் தொகையினும் அவன்நீ என்னும் உம்மைத் தொகையினும் இறுதி பன்மை எய்தின் ஏனவை இற்று நிற்பது ஏக சேடனாம்’ என உரைச்சூத்திரம் அமைத்துக் காட்டுவர் பிரயோகவிவேக நூலார். (23) |