சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

670 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல்
எனுநான்கு அளவையுள் உம்இலது அத்தொகை.’

‘உம்மைச் சகாரத்திலே
பின்மொழித் தொந்தன் சமாகாரத் தோடுஇத ரேதரமாம்
அன்மொழித் தோற்றம் சமுச்சயத் தோடும்அன் வாசயமே.’

‘எண்ணல் எடுத்தல் நீட்டல் முகத்தல்
அளவையுள் உம்மிலது அத்தொகை ஆகும்.’
 


நன்.368



பி.வி.23


மு.வீ.ஒ.99
 

அன்மொழித்தொகை
 

341 வேற்றுமை முதலிய ஐந்தொகை மொழியினும்
ஈற்று நின்று இயலும் அன்மொழித் தொகையே.
 

 

இஃது அன்மொழித்தொகை ஆமாறு கூறுகின்றது.

இ-ள்: வேற்றுமைத்தொகை முதலாகிய ஐவகைத் தொகைமொழிக் கண்ணும் இறுதிச்
சொற்கண்ணே நின்று நடக்கும் அன்மொழித்தொகை என்றவாறு.

வேற்றுமைத்தொகை முதலியனபட அச்சொல் தொக்கபின் அத்தொகை
அன்மொழித்தொகை ஆகாமையின் தொகுவதன் முன் அவற்றிற்கு நிலைக்களம் ஆகிய
சொல் பற்றி வரும் என்பது விளக்கிய தொகையினும் என்னாது ‘மொழியினும்’ என்றார்.
இறுதிச்சொல் படுத்தல் ஓசையால் பொருள் விளக்குமாறு வழக்கினுள்ளும் செய்யுளுள்ளும்
காண்க.

வரலாறு: பொற்றொடி- பவளவாய்- திரிதாடி- வெள்ளாடை- தகரஞாழல்- என
முறையே வேற்றுமைத்தொகை முதலிய ஐவகை நிலைக்களத்தும் பிறந்த
அன்மொழித்தொகை வந்தவாறு காண்க. இனி இவை பொற்றொடி தொட்டாள்-