என்ற மேற்கோள் நூற்பாவும் காட்டினார். நேமிநாதநூலார் ஐந்தொகைப் புறத்தும் அன்மொழித்தொகை கொண்டார். நே.சொல்.63 ‘உண்ணாமுலை’ ‘முற்றாமுலை’ ‘பாயினமேகலை’ எனத் தொகாநிலைத் தொடர்ப் புறத்தும் அன்மொழித்தொகை வரும் என்பது பிரயோக விவேக நூலார், சண்முகனார்- ஆகியோர் கருத்தாகும். இனி வடநூலார் அன்மொழித்தொகையாகிய வெகு விரீகிசமாசனை எழு வகையாகப் பிரிப்பர். துவிபதவெகுவிரீகி- இரதநூபுரசக்கிரவாளம் வெகுபதவெகுவிரீகி- பொன்னேறு பூண்முலை சங்கியோத்தரபதவெகுவிரீகி- கார் நாற்பது சங்கியோபயபதவெகுவிரீகி- பத்தெட்டு திகந்தராளபதவெகுவிரீகி- வடகிழக்கு சகபூர்வபதவெகுவிரீகி- கெழுதகைமை வியதிகாரலட்சண வெகுவிரீகி- கேசாகேசி என்பது பிரயோக விவேகம். (24) “வெகுபதம் உம்மைத்தொகைக்கண் அன்றி ஏனைத் தொகைக்கண்வாரா என்பர் தமிழ்நூலார்; வரும் என்பர் வடநூலார். வியதிகாரலக்கணம்- அன்னியோன்னியம்- இதரேதரம்- தடுமாற்றம்- இவை சமாநார்த்தகம். இவை பற்றிய வெகுவிரீகி வடமொழிக் கண் அல்லது வாராது. ‘இனி வடநூலார் உம்மைத்தொகையில் வெகுவிரீகி வாராது என்றும், ஆநகதுந்துபி (ஆநகமும்துந்துபியும் முழங்குமாறு அவதரித்த வசுதேவன்) என்பதனை மத்திய |