சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-47673

பதலோபன் மேல் வந்த வெகுவிரீகி என்றும், அவருள் சிலர் ‘ஆநகதுந்துபி’ என்பதனை
உம்மைத்தொகைமேல் வந்த வெகுவிரீகி என்றும் கூறுவர். தமிழ் நூலினும் தகரஞாழல்
என்பது ஒன்றனையே தொல்காப்பியம் நன்னூல் முதலியவற்றின் உரைகாரர்கள்
உம்மைத்தொகைப் புறத்து வந்த அன்மொழித்தொகைக்கு உதாரணம் காட்டியது அல்லது
வேறு உதாரணம் இன்மையானும், செய்யுள்களில் யாண்டும் உம்மைத்தொகைப் புறத்து
அன்மொழி வாராமையானும், ‘தகரஞாழல்’ என்பது தரக ஞாழலாகிய சாந்து என்பதன்றிச்
சாந்துபூசினாள் எனப்பொருள் விரிதலின் துவிரேபம் என்பது போல அன்மொழிக்கு
அன்மொழியாய் வருதலானும் அது பயின்று வாராமை அறிக. தொல்காப்பியர்
 

 
‘தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணலும்
ஒப்பில்வழியால் பிறிது பொருள் சுட்டலும்’
 


.(தொல்.சொல்.115)
எனக்கூறிய ஆகுபெயர் இலக்கணத்தைப் பாணினிபகவான் தற்குண சம்விஞ்ஞான
வெகுவிரீகி- அதற்குண சம்விஞ்ஞான வெகுவிரீகி- என அன்மொழிக்கு இலக்கணமாகக்
கூறுவர்” பி.வி.24 உரை.

இனிச் சிவஞான முனிவர் முதற்சூத்திரவிருத்தியில் இனி, அகரமுதல் னகர
இறுவாய் என்பன பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை;
பண்புத்தொகைப் பொருள்படத் தொக்கவழி அஃது அன்மொழித் தொகை ஆகாமையின்
பண்புத்தொகையிற் பிறந்த அன்மொழித்தொகை என்னாது பண்புத்தொகை
நிலைக்களமாகிய சொல்லிற் பிறந்த தொகை என்பது விளக்கிய தொல்லாசிரியர் எல்லாம்
பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை என வழங்கியவாறு; பிறவும்
அன்ன. அகரம் னகரம் என்பன பண்பு அல்ல வாயினும் பண்பு