சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-47675

மொழித்தொகையும் ஒன்றே என்றல் வடநூல் விதியோடு முரணுமாறு அறிக.’ என்று
குறிப்பிட்டுள்ளார்.

இருபெயரொட்டாகுபெயரும் அன்மொழித்தொகையும் ஒன்று என்பதே
உரையாசிரியர், சேனாவரையர், இந்நூலாசிரியர் இவர்களது கருத்தாகும்.
பிரயோகவிவேகநூலாரும் இதனை ஒருபுடை ஏற்றுள்ளார். தெய்வச்சிலையார்
வினைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகைகளை
இருபெயரொட்டாகுபெயராகக் கொண்டார்.

பண்புத்தொகையும் வினைத்தொகையும் ஒரு சொல் நீர்மைய ஆதலின்,
அவற்றுவழித் தோன்றும் அன்மொழித் தொகைகளை ஆகுபெயரென்றலே பரிமேலழகர்
கருத்தாகும் என்பர் சிலர். ‘கனங்குழை’ என்பதனைப் பரிமேலழகர் ஆகுபெயர் எனவும்,
சிவஞான முனிவர் அன்மொழித்தொகை எனவும் கூறுமாறு அறிக. இத்தொடர் பற்றிச்
சண்முகனார் உரைத்த ‘இருவர் மாறுகோள் ஒருதலை துணிவு’ என்ற கட்டுரையினை
உள்ளிட்ட அன்மொழித்தொகை ஆராய்ச்சியினை இந்நூலின் பிற்சேர்க்கையில் காண்க.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘பண்புத்தொகை வரூஉம் கிளவி யானும்
உம்மை தொக்க பெயர்வயி னானும்
வேற்றுமை தொக்க பெயர்வயி னானும்
ஈற்றுநின் றியலும் அன்மொழித் தொகையே.’

‘ஏனைத் தொகைச்சொற்கள் ஐந்தின் இறுதிக்கண்
ஆன பெயர்தோன்றின் அன்மொழியாம்.’

‘இருமொழி பன்மொழி பின்மொழி எண்ணோடு இருமொழிஎண்
மருவும் விதியா ரிலக்கணம் மற்றைச் சகமுன்மொழி




தொல்.சொல்.418


நே.சொல்.63