இது தொகைச்சொல் பொருள்நிலை கூறுகின்றது. இ-ள்: முன்மொழி முதலிய நால்வகை மொழியிடத்தும் சிறந்து நிற்கும் மேற்கூறிய தொகைச்சொல் பொருள் என்றவாறு. சிறந்து நிற்றலாவது வினையோடு இயைபு மாற்றான் மேற்பட்டுத் தோன்றுதல். வரலாறு: வேங்கைப்பூ என்புழிப் பூ என்னும் முன் மொழிக்கண் பொருள் சிறந்தது. அது நறிது என்னும் வினையொடு இயையுமாற்றான் மேற்பட்டுத் தோன்றியவாறு கண்டு கொள்க. மேல் வருவனவற்றிற்கும் ஈது ஒக்கும். அடைகடல் என்புழி அடை என்னும் பின்மொழிக்கண் பொருள் சிறந்தது. முன்பின் என்பன காலஇட வகையால் தடுமாறி நிற்குமேனும், ஈண்டு இடம் என்றதனான் இடவகையானே கொள்ளப்படும் என்பது கொள்க. கடல் அடைந்த இடமும் கடல் எனப்படுதலின், அடைகடல் என்பது அடையாகிய |