சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-48677

கடல் என இருபெயர்ஒட்டுப் பண்புத்தொகையாம். இனி வரையறை இன்மையான்
சிறுபான்மை முன்மொழி பின்மொழியாகத் தொக்க ஓர் ஆறாம்
வேற்றுமைத்தொகையாகவும் அமையும். உவாப்பதினான்கு- புலிவிற்கெண்டை- என்புழித்
தொக்க இரு மொழிப் பன்மைக்கண்ணும் இரண்டு வந்த பன்மொழிப் பன்மைக்கண்ணும்
பொருள் சிறந்தது. உள்ளாடை என்புழித் தொக்க இருமொழிக்கண்ணும் சிறவாது
உடுத்தாள் என்னும் புறமொழிக்கண் பொருள் சிறந்தது. பிறவும் அன்ன. 48
 

விளக்கம்
 

வினையோடு இயைதல்- முடிக்குஞ்சொல்லொடு பொருந்துதல்.

‘உண்டான்’ என்ற சொல்லின்கண் உ- என்பது காலமுன்; ன்- என்பது இடமுன்.
அங்ஙனமே உ- என்பது இடபின்; ன்- என்பது காலப்பின்.

அடைகடல் என்புழி, அடை என்பது இடவகையான் ஆகும்.

அடையாகிய கடல் என்று பொருள்படின் இருபெயரொட்டுப் பண்புத்தொகை.
இனிக் கடலது அடை என்று பொருள்படின் ஆறாம்வேற்றுமைத்தொகை. அடைஎன்பது
கரை. உம்மைத்தொகை பன்மொழியிலும் பொருள் சிறக்கும். அன்மொழித்தொகை
புறமொழியில் பொருள் சிறக்கும். ஏனைய தொகைகள் முன்மொழிக்கண்ணும்
பின்மொழிக்கண்ணும் பொருள் சிறத்தல் இடம் நோக்கிக் கொள்க.

பொருள் சிறந்த இடத்தை எடுத்தும், சிறவாத இடத்தைப் படுத்தும் ஒலித்திடுக.
அன்மொழித்தொகை புறமொழியில் பொருள் சிறத்தலின், அத்தொகை முழுவதையும்
படுத்தல் ஓசையாகவே ஒலித்திடுக.