சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

678 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலும்
இருமொழி மேலும் ஒருங்குடன் நிலையலும்
அம்மொழி நிலையாது அன்மொழி நிலையலும்
அந்நான்கு என்ப பொருள்நிலை மரபே.’

‘முன்மொழியும் பின்மொழியும் மூண்ட இருமொழியும்
அன்மொழியும் என்றிவற்றில் ஆம்பொருள்கள் முன்மொழிதான்
காலம் இடத்தால் கருத்தொடுஞ் சேர்ந்தறிதல்
மேலையோர் கண்ட விதி.’
முழுதும்
தற்புரு டன்துவி குக்கர்ம தாரயன் தாம்முதன்மை
பிற்பத மாம்எழு வாயாம் ஒரூஉத்தொகை பெண்ணணங்கே
முற்பதம் அவ்விய யீபாவம் முறைபிறழும்
சொற்பதம் தொக்கவை எல்லாம் முதன்மை துவந்தனுக்கே.’
‘முன்மொழி பின்மொழி இருமொழி பிறமொழி
நிலைபெறல் அத்தொகை மரபுநான்கு ஆகும்.’
 




தொல்.சொல்.419



நே.சொல்.64
நன்.370



பி.வி.25


மு.வீ.ஒ.101
 

உயர்திணை உம்மைத் தொகையீறு
 

343 உயர்திணை மருங்கின் உம்மைத் தொகையே
பலர்சொல் நடைத்துஎன மொழிமனார் புலவர்.
 

 

இஃது உம்மைத் தொகைக்கண் ஆவது ஒரு வழு அமைக்கின்றது.

இ-ள்: உயர்திணைக்கண் வரும் உம்மைத்தொகை ஈறு பலரைச் சொல்லும்
சொல்லின் இறுதிபோலப் பன்மை