சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-49679

உணர்த்தி நிற்கும் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.

வரலாறு: கபிலன் பரணன் என்புழிக் கபிலன் என்னும் னகர ஈறு சந்தியால்
கெட்டுக் கபிலபரணன் என நின்றவழி இருபெயராய் நின்றமையின், வந்தார் என்னும்
பன்மையோடு முடிய வேண்டுதலான் ஆண்டு நின்ற ஒருமை ஈறு பன்மையொடு முடிதல்
வழு என்று கருதி னகர ஈறு ரகர ஈறாய் ஒலிக்கும் என வழு அமைத்தார்.
கல்லாடமாமூல பெருந்தலைச் சாத்தர் என்பன போல்வனவும் அன்ன.
உயர்திணைப்பெயர் என்னாது ‘மருங்கின்’ என்றார்; உயர்திணை விரவுப்பெயரும்
மயங்குதற்கு. 49
 

விளக்கம்
 

உயர்திணை உம்மைத்தொகை பலர் பால் ஈற்றது ஆக வேண்டுவதன் காரணம்
கூறப்பட்டது. உரை சேனாவரையர் உரையின் விளக்கமேயாம். ‘கபில பரணர் வந்தார்
என்பது உம்மைத்தொகை. உம்மைத்தொகையைப் பிரித்து எண்ணுதல் கூடாது. கபிலன்
பரணன் இருவரும் வந்தார் என்பது செவ்வெண் தொகைபெற்றது. செவ்வெண்தொகை
விகாரத்தால் தொக்கவழி கபிலன் பரணன் எனவே வரும். செவ்வெண்ணைப் பிரித்தும்
பொருள் கொள்ளலாம்.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  முழுதும் -
‘உலைவில் உயர்திணைமேல் உம்மைத் தொகைதான்
பலர்சொல் நடைத்தாய்ப் பயிலும்.’
‘உயர்திணை உம்மைத் தொகைபலர் ஈறே’ நன்.372
தொல்.சொல்.421

நே.சொ.65
மு.வீ.ஒ.104
 
344 தொக்குழி மயங்குந இரண்டு முதல்ஏழ்
எல்லைப் பொருளின் மயங்கும் என்ப.