சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-50,51681

புலிகொல்யானை என்பது புலியைக்கொன்ற யானை- புலியால் கொல்லப்பட்ட
யானை- புலியினில் கொல்லப்பட்ட யானை- என மூன்று பொருள் மயங்கிய
பன்மொழித்தொடர்; குரங்கெறி விளங்காய் என்பது குரங்கான் எறியப்பட்ட விளங்காய்-
குரங்கின் எறியப்பட்ட விளங்காய்- குரங்கிற்கு எறிந்த விளங்காய்- குரங்கை எறிந்த
விளங்காய்- என நான்கு பொருள் மயங்கிய பன்மொழித்தொடர். பிறவும்
வந்துழிக்காண்க. 50
 

விளக்கம்
 

திரையனூர், வாளைமீன் இருபொருட்கண் மயங்கும். உள்ளல் தலைப்படல்

கடிப்பகை, மூன்று பொருட்கண் மயங்கும். புலிகொல் யானை

பொன்மணி, நான்குபொருட்கண் மயங்கும். குரங்கு எறிவிளங்காய்

கருப்புவேலி - ஐந்து பொருட்கண் மயங்கும்.
                    உரைவிரி - ஆறு பொருட்கண் மயங்கும்.
                    சொற்பொருள் - ஏழு பொருட்கண் மயங்கும்.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  முழுதும்
‘தொகைநிலை விரித்துக் சொல்லுங்கால் ஏழு
வகைநிலை அளவும் வகுக்கப் படுமே.’
நன்.373

தொ.வி.90
 

தொகாநிலைத் தொடர்மொழி
 

345 முற்றுஈ ரெச்சம் எழுவாய் விளியே
ஆறுஉருபு இடைஉரி அடுக்குஇவை தொகாநிலை.
 

 

இது முற்கூறிப்போந்த தொகாநிலைத் தொடர்மொழி இவை என்கின்றது.