சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

682 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இ-ள்: தெரிநிலை முற்றும் குறிப்பு முற்றும் பெயரெச்சமும் வினையெச்சமும்
எழுவாயும் விளியும் ஆறு உருபுகளையும் ஏற்ற சொற்களும் இடைச்சொல்லும்
உரிச்சொல்லும் அடுக்கு மொழியும் தத்தமக்கு உரிய மொழிகளோடு தொடரும். இவை
முற்கூறிப் போந்த தொகாநிலைத் தொடர்மொழிகளாம் என்றவாறு.

வரலாறு: உண்டான் சாத்தன்- குழையன் கொற்றன்- உண்ட சாத்தன்- கரிய
குதிரை- உழுது வந்தான்- விருந்தின்றி உண்ட பகலும்- ஆவந்தது- சாத்தாகேள்-
நிலத்தைக் கடந்தான்- சாத்தனொடு வந்தான்- சாத்தற்குக் கொடுத்தான்- வரையின்
இழிந்தான்- சாத்தனது ஆடை- தட்டுப்புடைக்கண் சென்றான்-
 

 

‘அதுகொல் தோழி காம நோயே’
‘நனிபே தையே நயன்இல் கூற்றம்’

பாம்பு பாம்பு-என முறையே காண்க. பிறவும் அன்ன.
 
குறுந்.5
புறம்.227

51

விளக்கம்
 

தொகாநிலை அல்வழிக்கண் ஒன்பது, வேற்றுமைக்கண் ஆறு என்பது அறிக.
“வேற்றுமைத்தொகை விரிந்தவழி வேற்றுமைத் தொகாநிலை, வினைத்தொகை விரிந்தவழி
பெயரெச்சத்தொகாநிலை, பண்புத்தொகையும் உவமைத்தொகையும் உம்மைத்தொகையும்
விரிந்தவழி இடைச்சொற்புணர்ச்சி, அன்மொழித்தொகை விரிந்தவழி
வேற்றுமைத்தொகாநிலை முதல் ஏற்பனவுமாம் என்பது அறிக.’- நன்.374 விருத்தி.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  முழுதும் நன்.374