சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

684 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

தீ தீ தீ (தண்டி.மேற்.) என்பது பொருள்நிலைக்கண் மும்முறை அடுக்கி வந்தது.
இது விரைசொல் அடுக்கு. ஏனையவும் வந்துழிக் காண்க.

‘ஏஎஏஎ அம்பல் மொழிந்தனள் யாயே’-
                    ‘நல்குமே நல்குமே நல்குமே நாமகள்’-
                    ‘பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ’-
                    இவை இசைநிறை. பிறவும் அன்ன. 52
 

விளக்கம்
 

அசைநிலை இரண்டே முறை அடுக்கும்; பொருள்நிலை இரண்டு முறையும் மூன்று
முறையும் அடுக்கும்; இசைநிறை இரண்டு முறையும் மூன்று முறையும் நான்கு முறையும்
அடுக்கும். பொருள் நிலைக்கு எட்டுப் பொருண்மைகள் கூறப்பட்டுள்ளன. இடைவிடாமை,
துணிவு முதலாகப் பிறவும் உள,
 

 ஒத்த நூற்பாக்கள்
 

 ‘இசைநிறை அசைநிலை பொருளொடு புணர்தல்என்று
அவைமூன்று என்ப ஒருசொல் அடுக்கே.’

‘இசைப்படு பொருளே நான்குவரம்பு ஆகும்.’
‘விரைசொல் அடுக்கே மூன்றுவரம் பாகும்.’
‘இசைநிறை நான்கு வரம்பாம்- அசைநிலை
ஆய்ந்த ஒருசொல் அடுக்கிரண்டாம்.’
முழுதும்
‘அசைநிலை இசைநிறை அடுக்குஇரு திறத்தன.’

‘விரைவு மூன்றுஇசை நிலைநான் கடுக்கே,’



423
424

நே.சொல்.50
நன்.395,தொ.வி.198

மு.வீ.ஒ.93
106