இன்னும் அதனானே, |
| ‘நன்னீரை வாழி அனிச்சமே’ ‘கரவலம் என்றோரைக் கண்டது இல்லையோ இரவெல்லாம் நின்றாயால் ஈர்ங்கதிர்த் திங்காள்’ | குறள்.111 |
எனக் கேளாமரபினவற்றைக் கேட்பன போலவும், |
| நிலம் வல்லென்றது- நீர் தண்ணென்றது- ‘தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்’ ‘வண்சிறைப் பவளச் செவ்வாய்ப் பெடைஅன்னம் மடமை கூரத் தண்கய நீருள் கண்ட தன்நிழல் பிறிதுஎன்று எண்ணிக் கண்டனம் கள்வ மற்றுஉன் காதலி தன்னை நீர்க்கீழ்ப் பண்டையம் அல்லம் வேண்டா படுக்கஎன்று ஊடிற்று அற்றே’ ‘கருவிரல் செம்முக வெண்பற்சூல் மந்தி பருவிரலால் பைஞ்சுனைநீர்த் தூவிப்- பெருவரைமேல் தேன்தேவர்க்கு ஈயும் மலைநாட வாரலோ வான்தேவர் கொட்கும் வழி’ திணைமாலை. |
குறள்.293
சீவக.1623
10 |
எனச் செய்யா மரபினவற்றைச் செய்வன போலக் கூறலும் கொள்க. பிறவும் அன்ன. இனி வாரா மரபினவற்றிற்கு முலைவந்தன- தலைவந்தன என்பன காட்டின், ஆண்டு வருதல் வளர்தற் பொருட்டு ஆகலான், அவை ஈண்டைக்கு ஆகா என்க. 53 |
விளக்கம் |
சொற்பொருள் பற்றி வழுவாயினும் போந்தபொருள் பற்றிக் கோடலின் அமையும் என்பது. இஃது இலக்கணையின் பாற்படும். |