சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-53687

அவல் அவல் என்கின்றது- அவல் இடித்தற்கு ஏற்புடைத்து என்பது.

மழை மழை என்கின்றது- மழையை எதிர்நோக்கியுள் என்பது.

ஆண்டுச் சென்று கிடக்கும்- இந்நெறியிடைச் செல்வோர் ஆண்டு எய்துவர்
என்பது.

அக்குன்றோடு சென்று அணுகும்- இயற்கையமைப்பில் இரண்டும் இணைந்துள்ளன
என்பது.

ஆழ்ந்துகிடக்கும்- ஆழமாக உள்ளது என்பது.

அகன்றுகிடக்கும்- அகலமாக உள்ளது என்பது.

கண் உரைக்கும்- கண்ணை நோக்கி உணரலாம் என்பது.

திங்கள் செப்பும்- திங்களின் செயலால் அறியலாம் என்பது.

அனிச்சம், திங்கள் என்பன கேட்பன போல அவற்றை விளித்துக் கூறுதலும்,
சொல்லும் ஆற்றல் இல்லனவாய் உள்ளனவற்றை நிலம் வல்லென்றது- நீர்தண்ணென்றது-
என்றாற்போலக் கூறுதலும், பெடையன்னத்துக்கு எண்ணமும் பேச்சும் ஊடலும்
என்னுமிவற்றைக் கூறுதலும், மந்தைக்குத் தேவர்க்குக் கொடுக்கும் செயலைக் கூறுதலும்,
நெஞ்சுக்குச் சுடுந்தன்மை கோடலும் போல்வன செய்யா மரபின முறைச் செய்வனபோலக்
கூறலாம்.

‘முலைவந்தன என்பது பற்றிய மறுப்புச்செய்தி சேனாவரையர் சொற்றது. முன்னைய
உதாரணங்கள் பல சேனாவரையர் காட்டியவை; அனிச்சம்தொட்டு வரும்
எடுத்துக்காட்டுக்கள் மயிலைநாதர் காட்டியவை. (நன்.408)