சொல்லெச்சம் ஏழும் எஞ்சுபொருட்கிளவி கொண்டு அல்லது அமையாமையின்
எச்சம் ஆயின. குறிப்பு எச்சம் மூன்றும் ஒரு தொடர்க்கு ஒழிபாய் எச்சம் ஆயின, எஞ்சு
பொருட்கிளவி எனினும் எச்சம் எனினும் ஒக்கும்.
பெயரெச்சமும் வினையெச்சமும் முறையானே பெயராய் வினையானும் முடிதலின்
ஆகுபெயரான் அவற்றைப் பெயர்வினை’ என்றார்.
எச்சமாவன ஒருசார்ப்பெயரும் வினையும் இடைச்சொல்லும் ஆதலின், பெயரியல்
முதலாயினவற்றுள் பத்தும் ஒருங்கு உணர்த்துதற்கு ஏலாமையின், ஈண்டுப் போதந்து
கூறினார். 54