| ‘எஞ்சணி என்ப எளிதுணர் பலமொழி துஞ்சில் சிறப்பல் தோன்றாது ஒழித்தலே.’
‘பெயர்வினை உம்மைசொல் பிரிப்புஎன ஒழியிசை எதிர்மறை இசைக்குறிப்பு எஞ்சணி பத்தே.’ |
தொ.வி.318
319
|
பெயரெச்ச வினையெச்சங்கட்கு முடிபு |
349 | முன்னவை இரண்டும் சொன்னவை ஆகும். | |
இது உரைத்தாம் என்னும் உத்தி கூறுகின்றது. இ-ள்: முற்கூறிய எச்சங்களுள் பெயரெச்சமும் வினையெச்சமும் முன்னர் முடிபு கூறப்பட்டனவாம் என்றவாறு. அவையாவன: |
| ‘அவற்றுள் செய்த செய்கின்ற செய்யும்என் பாட்டின் செய்வது ஆதி அறுபொருள் பெயரொடு முடியும் முறையது பெயரெச் சம்மே’ எனவும் ‘வினையெஞ்சு கிளவிக்கு வினையும் குறிப்பும் நினையத் தோன்றிய முடிபுஆ கும்மே ஆவயின் குறிப்பே ஆக்கமொடு வருமே’ |
248
249 |
எனவும் முற்கூறிப் போந்தவாம் எனக் கொள்க. அற்றேல் ஈண்டு எச்சங்களொடு கூட்டி ஓதியமையான் போந்தது என்னை எனின், சொல்லெச்சமும் குறிப்பெச்சமும் என எச்சங்களைப் பகுத்தலின் ஆண்டுப் பெறப்படாத சொல்லெச்சம் ஆதல் அவற்றிற்கு எய்துவித்தல் என்க. 55 |
விளக்கம் |
உரைத்தாம்- முன்னர்க் கூறினாம் என்பது. இந்நூலுள் உத்திவகை பொருளதிகாரப் பாட்டியலுள் கூறப்பட்டுள்ளது. பெயரெச்சமும் வினையெச்சமும் எஞ்சு பொருட்கிளவியான் முடியும் சொல்லெச்சமாக வருதல் உண்மையான், அவையும் ஈண்டுக் கூறப்பட்டன என்பது இவ்வாசிரியர் கருத்து. |