வரலாறு: யானே கொள்வேன்- யானோ கள்வேன்- வரலும் உரியன்- என்னும் எதிர்மறை எச்சங்கள் முறையானே கொள்ளேன்- கள்ளேன்- வாராமையும் உரியன்- என்னும் எதிர்மறைப் பொருளை உணர்த்தும் சொல்லான் முடிந்தவாறு காண்க. இவருள் தானே கொண்டான்- தானே கொண்டான்- என்னும் பிரிநிலை எச்சங்கள் பிறர் கொண்டிலர் என்னும் பிரிக்கப்பட்ட பொருளை உணர்த்தும் சொல்லான் முடிந்தவாறு காண்க. அஃதேல், தான் எனப்பட்டான் அன்றே ஆண்டுப்பிரிக்கப்பட்டான்; ‘பிறர் கொண்டிலர்’ என்பது அவனை உணர்த்தும் சொல் அன்மையின் அவை பிரிநிலை கொண்டு முடிந்தது இல்லையால் எனின், அற்றன்று; தான் எனப்பட்டான் பிறரில் பிரிக்கப்பட்ட பொருளை உணர்த்தும்வழிப் பிறரும் அவனில் பிரிக்கப்பட்டமையான், அவை பிரிநிலை கொண்டனவேயாம் என்க. தானே கொண்டான்- தானோ கொண்டான்- என்ற வழி, தானே- தானோ- என்பன கொண்டான் எனப் பிரிக்கப்பட்ட பொருள் வினையினைக் கொண்டு முடிதலே பொருத்தம் உடைத்து எனின் தானே கொண்டான்- தானோ கொண்டான் எனத் தான் என்னும் எழுவாய்வேற்றுமை கொண்டான் என்னும் பயனிலை கொண்டன; ஏகார ஓகாரங்கள் பிரிவு உணர்த்தின; ஆண்டு எச்சமும் அவ்வெச்சத்தை முடிக்கும் சொல்லும் இன்மையின் அது பொருத்தம் உடைத்து அன்று என்க. ‘கூரியதோர் வாள்மன்’ ‘வருகதில் அம்மஎம் சேரி சேர’ அகம்.276 ‘கொளலோ கொண்டான்’
என்னும் ஒழியிசை எச்சங்கள் முறையானே திட்பம் இன்று- வந்தால் இன்னது செய்வல்- கொண்டு உய்யப்போமாறு |