‘அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும்’ (தொ.சொ.316) என இயற்றுதற் கருத்தாவாகவும், ‘அம்ம கேட்பிக்கும்’ (276) என ஏவுதற்கருத்தாவாகவும். ‘பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் ‘சொல்லின் ஆகும்’ (156) எனக் கருவியாகவும், ‘கொடையெதிர் கிளவி’ (99) எனக்கொள்வோனாகவும். ‘முன்மொழி நிலையல்’ (419) என இடமாகவும் பொருளிற்கு வேறு என்று கூறி, ‘கம நிறைந்தியலும் (355) ‘உருஉட் காகும்’ (300) ‘செல்லல் இன்னல் இன்னா மையே’ (302) ‘எல்லே விளக்கம்’ (269) ‘கொல்லே ஐயம்’ (268) எனப் பொருளிற்கு வேறு அன்று என்றும் கூறினார். அச்சொற்கு ஒரு குணமே அன்றிப் பலகுணம் பொருந்தாது. அவர்க்கும் அதுவே கருத்து. அக்கருத்து அறிதல் அருமை நோக்கி ‘நூலாசிரியர் கருத்தினை நோக்காது’ என்றாம். இக்கருத்துச் சொற்கேயன்றி அவர் கூறிய விதி விலக்கிற்கெல்லாம் பொது’- இலக்கணக்கொத்து (6-உரை) “சொல்லாவது, எழுத்துத் தனித்தாயினும் கூடிநின்றாயினும் தம்மை உணர்த்தி, இருதிணைப் பொருள் தன்மையும் ஒருவன் உணர்தற்கு நிலமாகி நிற்கும் ஒலியாம். ஆ-ஈ-ஊ- முதலாயின ஓர் எழுத்தாலாய சொற்கள்; கண்- கடல்-கருத்து கறங்கல் முதலாயின பலவெழுத்தாலாய சொற்கள். “இனி, ஆமுதலாயின, தம்மை உணர்த்தும் நிலைமைக் கண் எழுத்தாகவும், பெற்றம் முதலாகிய பொருளை உணர்த்தும் நிலைமைக்கண் சொல்லாகவும் நின்று, இருதன்மையும் பெற்றவழிச்சொல்லுக்கு உறுப்பு ஆதல் தன்மை எய்தா எனவும், தம்மை உணர்த்தும் ஒரு தன்மை உடையவாய வழியே |