சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

700 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்





 
‘உம்மை எச்சம் இருவீற் றானும்
தன்வினை ஒன்றிய முடிபா கும்மே.’

‘தன்மேல் செஞ்சொல் வருஉங் காலை
நிகழுங் காலமொடு வாராக் காலமும்
இறந்த காலமொடு வாராக் காலமும்
மயங்குதல் வரையார் முறைநிலை யான.’
‘எனவென் எச்சம் வினையொடு முடிமே.’
‘எஞ்சிய மூன்றும் மேல்வந்து முடிக்கும்
எஞ்சுபொருட் கிளவி இலஎன மொழிப.’ ‘அவைதாம்
தத்தம் குறிப்பின் எச்சம் செப்பும்.’
‘தத்தம்எச் சத்தொடு சார்ந்துநின் றியலும்.’
 

436




437
438

439
440

மு.வீ.ஒ.108

சொல்லெச்சத்திற்குச் சிறப்புவிதி
 

351சொல்என் எச்சம் முன்னும் பின்னும்
சொல்அளவு அல்லது எஞ்சுதல் இன்றே.
 
 

இது சொல்லெச்சத்திற்கு எய்தியதன் மேல் சிறப்புவிதி கூறுகின்றது.

இ-ள்: சொல்லெச்சம் ஒரு சொற்கு முன்னும் பின்னும் சொல்மாத்திரம் எஞ்சுவது
அல்லது தொடராய் எஞ்சுதல் இன்று என்றவாறு.

வரலாறு:

 ‘ஒருகண்- சிறக்கணித்தாள் போல நகும்’
என்புழி நோக்கி என்னும் சொல் முன்னும்,

‘கல்கெழு கானவர் நல்கு றூஉம்மகள்
மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே.’
 
குறள்.1095




குறுந்.71