என்புழி எமக்கு என்னும் சொல் பின்னும் எஞ்சி நின்றவாறு காண்க. ‘உயர்திணை என்மனார்’ தொல்.சொல்.1
என்புழி ஆசிரியர் என்பதூஉம், ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர்’ (குறள்-10)
என்புழிச் சேர்ந்தார் என்பதூஉம் அன்ன.
அற்றேல், அவை முறையானே என்மனார்- நீந்துவர் என்னும் முற்றிற்கு முடிபு ஆகலின். ‘எஞ்சிய மூன்றும் மேல்வந்து முடிக்கும் எஞ்சுபொருட் கிளவி இல’ என்பதனொடு மாறுகொள்ளும் எனின், அற்றன்று; அவை அவாய்நிலைக்கண் அவற்றொடு இயைவதல்லது, அவாய்நிலை இல்வழி இயையாமையின், எச்சமாய் வந்து இயைந்தனவேயாம்; முடிபாய் வந்து இயைந்தன அல்ல என்க; ‘மற்றுச்சொல் நோக்கா மரபின அனைத்தும் முற்றி நிற்பன முற்றியல் மொழியே’ என்ப ஆகலின். இனி, இச்சூத்திரத்தை நலிந்து வேறு பொருள் கூறுவாரும் உளர். அது பொருளன்மை சூத்திரக்கிடக்கை முறைமை நோக்கி உணர்க. இனிக் குறிப்பெச்சத்திற்கு ஈண்டுக் காட்டிய செய்யுள் உதாரணங்கள் செய்யுளியலுள் கூறிய குறிப்பு எச்சத்திற்கே உரிமை உடைமையின் அவற்றைக் காட்டுதல் அமைவுடைத்து அன்றெனின், ஈண்டுக் கூறிய இலக்கணங்களை எய்திநின்ற எச்சங்களைப் பொருந்திய செய்யுட்கள் ஆண்டு எச்சம் என்னும் உறுப்பு நிகழ வந்த செய்யுளாம் என்ற துணை அல்லது ஆண் எச்சங்களுக்கு வேறு இலக்கணம் கூறாமையின் இவை அவற்றினின்றும் வேறு அன்மையான்அமைவுடைத்து |