சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

702 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

என்க. யாம் இங்ஙனம் கூறியதற்குச் ‘சொல்லொடும் குறிப்பொடும் முடிவுகொள் இயற்கை-
புல்லிய கிளவி எச்ச மாகும்’ (தொல்.பொருள்-518) என்னும் செய்யுளியல் சூத்திரமே
சான்றாதல் அறிக.

இனி இவ்வாறன்றி ஈண்டுக் கூறிய பெயரெச்சம் முதலிய பத்து எச்சங்களுக்கும்
பிறவாற்றான் இலக்கணம் கூறுவாரும் உளர். அவையும் பெரும்பாலும் இவற்றுள்ளே
அடங்குமாறும் பிற பகுதிப்படுமாறும் ஓர்ந்து உணர்க.                        57
 

விளக்கம்
 

நோக்கி நகும்- நோக்கி- காலமுன்
                    மருந்து எமக்கு- எமக்கு- காலபின்.

என்மனார்- நீந்துவர்- என்பன தேவைப்பட்ட பொழுதே ஆசிரியர்- சேர்ந்தார்- என்பன கொள்ளப்பட்டன என்க.

‘இனிக் குறிப்பெச்சத்திற்கு’ என்ற பகுதி நச்சினார்க்கினியர் கூற்றை
மறுத்தற்கு எழுந்ததாம்.

சொல் என்னும் சொல் எஞ்சி நிற்பது சொல்லெச்சம் என்பார் கூற்று
நலிந்து கொண்ட பொருளாகக் கொள்ளப்படுகிறது.
 

ஒத்த நூற்பா
 

  முழுதும்
 
தொல்.சொல்.441

உம்மை யெச்சத்தின் காலமயக்கம்
 

352 தன்மேல் செஞ்சொல் வரூஉங் காலை
நிகழுங் காலமொடு வாராக் காலமும்
மயங்குதல் வரையார் முறைநிலை யான.
 

 

இது மேல் உம்மைஎச்சத்திற்கு முடிபாம் என்ற தன் வினை காலம்
வேறுபடுதலும் படாமையும் உடைமையான்