சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

704 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இஃது ஓசை வேறுபாட்டான் ஒருசொல் ஒருசொல்லாம் என்பதோர் ஒழிபு கூறுகின்றது.

இ-ள்: ஒரு தொழிலினை மேற் செய்யாய் என்னும் மறையாகிய
முன்னிலை வினைச்சொல் அத்தொழிலினைச் செய் என்னும் உடன்பாட்டு
வினைச்சொல்லாம் இடத்தினை உடைத்து என்றவாறு.

‘இடன் உடைத்து’ என்றதனான், பெரும்பான்மையும் மறையாய் வரும்
உண்ணாய்- ஓதாய்- என்பன போல்வன, வேண்டிக்கோடல் பொருண்மைக்கண்
படுத்தல் ஓசையால் சிறுபான்மை உடன்பாட்டின்கண்ணும் வரும் என்பதாயிற்று.

வரலாறு:
                    ‘அறியாய் வாழி தோழி பொறிவரிப்
                    பூநுதல் யானை (அகம்.268)

என்னும் அகப்பாட்டினுள் அறியாய் என்றது.

‘காமம் கலந்த காதலர் உண்டெனின்
                    நன்று மன்இது நாடாய் கூறி.’

என்றதனோடு இயையுங்கால், ‘அவனொடு கூட்டம் உண்டு எனின் அது
மிகவும் நன்று; அதனை ஆராயாமல்’ கூறுகின்றாய்; அதனை நின்மனத்தான்
ஆராய்ந்து பாராய், என வேண்டிக்கோடல் பொருண்மைக்கண் படுத்தல்
ஓசையான் முன்னிலை ஏவல் உடன்பாட்டின்கண் வந்தவாறு காண்க. இனி
வழக்கின்கண்ணும், இந்நாள் எம்மில் வந்து உண்ணாய்- இப்பொழுது
சொல்லாய்- என வரும். பிறவும் அன்ன.

உண்- தின்- என்பன முதலிய முன்னிலை ஏவல் உயர்ந்தான்
இழிந்தானை ஏவுதற்கண் வருவன. இவை அன்ன அல்லவாம் என்க. நீ
கலாய்த்திராது உண்ணாய் என்ற பொருளை உண் என்பது தாராது, ஏவுதற்
பொருட்டாய் நின்றமையின்.

59