சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-61707

இ-ள்: ஒரு பொருளைக் குறித்து வரும் பலபெயர் பொருள் நீங்காதன
வாயினவற்றை ஒரு பொருட்குப் பலபெயர் வந்தன என்று கடியார் என்றவாறு.

வரலாறு:
                    ‘வையைக் கிழவன் வயங்குதார் மாணகலம்
                    தையலாய் நீஇன்று நல்கினை நல்காயேல்
                    கூடலார் கோவொடு நீயும் படுதியே
                    நாடறியக் கௌவை ஒருங்கு’

(முத்தொள்.)

எனவும்,

‘கொய்தளிர்த் தண்டலைக் கூத்தப் பெருஞ்சேந்தன்
      வைகலும் ஏறும் வயக்களிறே- கைதொழுவல்
      காலேக வண்ணனைக் கண்ணாரக் காணஎம்
      சாலேகம் சார நட’

(முத்தொள்.)
 

எனவும் வரும் இவற்றுள் வையைக் கிழவன்- கூடலார்கோ என்பன ஒரு பொருளை
வரைந்து உணர்த்தி நின்றாற் போலக் காலேகவண்ணன் என்பது சாந்து பூசினார்
எல்லார்க்கும் பொதுவாய்க் கூத்தப்பெருஞ்சேந்தனையே வரைந்து உணர்த்தாமையின்
அது பிரிவு உடைமையான் கடியப்படுமாலோ எனின், அற்றன்று;

‘களவுடன் படுநரின் கவிழ்ந்து நிலங்கிளையா
                    நாணி நின்றோள் நிலைகண்டு யானும்
                    பேணினன் அல்லனோ மகிழ்ந வானத்து
                    அணங்கரும் கடவுள் அன்னோள்நின்
                    மகன்தாய் ஆதல் புரைவதால் எனவே’      அகம்.16

என்புழி, வானத்து அணங்கருங்கடவுள் அன்னோள் என்பது மகளிர்க்கு எல்லாம்
பொதுவாய் நாணி நின்றோளை வரைந்து உணர்த்தாதாயினும், சொல்லுவான் குறிப்பான்
அவளையே உணர்த்தினாற் போல, ‘காலேக வண்ணன்’ என்பதும் பொது ஆயினும்
சொல்லுவான் குறிப்பான் கூத்தப்