சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

708 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

பெருஞ்சேந்தனையே உணர்த்திப் பிரிவிலதாய் நிற்றலின் கடியப்படாது என்க.
 

 

‘பொற்பூண் சுமந்த புணர்மென்முலைக் கோடு போழ
நற்பூங் கழலான் இருதிங்கள் நயந்த வாறும்
கற்பாடு அழித்த கனமாமணித் தூண்செய் தோளான்
வெற்பூடு அறுத்து விரைவின்னெறிக் கொண்டவாறும்’




சீவக.19
 
என்பதும் அது. இவ்வாறே சான்றோர் செய்யுளில் பயின்று வருமாறும் உணர்க.

61


விளக்கம்

கூத்தப்பெருஞ்சேத்தனே காலேகவண்ணன் என்பது அறிக. நற்பூங்கழலானே
கற்பாடு அழித்த கனமா மணித்தூண்செய் தோளானும் ஆவன் என்க.

இவற்றுள் பின்தொடர்கள் தனிச்சிறப்புடைய பொருள் தாராது சுட்டுப்பொருளவாய்
நிற்குமாறும் அறிக. இக்கருத்தை,
 

  பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்
பொருள்வேறு படாஅது ஒன்றா கும்மே’

சொல்.37
 
என்ற நூற்பாஉரையுள் நச்சினார்க்கினியர் கூறி, இந்நூற்பாவிற்கு இரட்டுறமொழிதலைப் பொருளாகக் கொள்வர்.

இந்நூற்பா விளக்கம் சேனாவரையர் உரைத்ததே.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘ஒருபொருள் இருசொல் பிரிவில வரையார்.’

முழுதும்
தொல்.சொல்.460. மு.வீ.ஒ.124
நன்.397