நிவந்து ஓங்கு என்ற இரண்டும் ஒருபொருளன; மீ மிசை என்ற இரண்டும் ஒரு பொருளன. “ஒருபொருளைக் குறித்து வரும் பல சொற்கள் அவ்வாறு வருதற்கு ஒரு காரணம் இன்றேனும் செவிக்குச் சொல்லின் தோன்றச் சிறந்து நிற்றலின், அவை வழு என்று நீக்கப்படா. “ ‘சிறப்பினின்’ என்பதற்குச் சிறப்பித்தலின் என்ற பொருள் இன்று. இக் காரணத்தான் வந்தனவேல் அவை ஒரு பொருட் பலபெயருள் அடங்கும். மீமிசை என்றால் மேல் என்பதே பொருளன்றி, விசேடித்த தொருசிறப்பு இன்று. உண்டேல் அஃது இஃது எனவிதந்து கூறுவார் ஆதலின் அவ்வுரை பொருந்தாது.”- நன்.398 விருத்தி. |