சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-67717

என்னும்; இவ்வாசிரியர் நன்னூலாரை ஒட்டிப் பொருள் எட்டு என்றார்.

யாற்றுநீர்ப் பொருள்கோள் நீங்கலாக ஏனைய எல்லாம் மொழிமாற்றின்கண்
அடங்குமேனும், தெளிவு கருதி வெவ்வேறு பெயரிட்டார்.

இயல்பாகச் சொற்கள் உள்ளவாறே பொருள்படும் யாற்றுநீரை யடுத்து, ஓரடியில்
உள்ளசொற்களை மாற்றிப் பொருள் கொள்ளும் மொழிமாற்றும், அதனையடுத்து மொழி
மாற்றுதலினும் ஒருவரிசை பின்பற்றப்படும் நிரல் நிறையும், அதனையடுத்து
ஈற்றுச்சொல்லும் முதற்சொல்லும் இணைந்து பொருள்படும் விற்பூட்டும், அதன்பின்னர்
இடையிலுள்ள சொல்லே விளக்காய் முன்னும் பின்னும் சென்று பொருள் தரும்
தாப்பிசையும், பின்னர் இறுதி தொட்டு முதல்காறும் தலைகீழாய் வரும் அளைமறிபாப்பும்,
பின்னர் விருப்பம் போலக் கூட்டிப் பொருள் செய்யும் கொண்டுகூட்டும், இறுதியில்
அடிகளையே மாற்றிப் பொருள் செய்யும் அடிமறி மாற்றும் வைக்கப்பட்டன.
 

ஒத்த நூற்பாக்கள்
 

 

‘நிரல்நிறை சுண்ணம் அடிமறி மொழிமாற்று
அவைநான்கு என்ப மொழிபுணர் இயல்பே.’

‘பூட்டுவில் விதலை யாப்புக் கொண்டுகூட்டு
ஒருசிறை நிலையே பாசி நீக்கம்என்று
ஆக்கிய ஐந்தும் பொருள்கோ ளாகும்.’

‘பொருள்நடை யாவது
அளைமறி கோடலும் மொழிமாற்றுக் கோடலும்
கொண்டு கூட்டும் இருநிரல் நிறையும்
சுண்ணங் கோடலும் முதலா யினவே


தொல்.சொல்.404



இறை.கள.56 உரை