சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

718 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

 

அவைதாம் தலைமையும் இன்மையும் கூட்டிப்
பின்னரும் காரணம் பற்றிய
பொருட்டாத் தோன்றும் பொருள்வகை உடைத்தே.’

‘பொருள்கோ ளாவது
கொழுங்கொடி வள்ளி செழுங்குலை வாழை
தீங்கரும் பேமலர் திகழ்தரு பலவே
தேங்கமழ் அசோகு செருவிற் பூட்டே
பூம்புனல் யாறெனப் பொருள்கோள் ஏழே.

அவற்றுள்,
கொழுங்கொடி வள்ளி கூறுமுற் பொருளே
செழுங்குலை வாழையின் சொற்பொருள் ஈறே
இன்தீங் கரும்பில் இடையது பொருளே
வன்தாள் பலவுக்கு முதலிடை பொருளே
நற்பூ அசோகுக்கு நடுவது பொருளே
விற்பூட்டு மேலும் கீழும் பொருளே
இரும்புனல் யாற்றினுக்கு எங்கும் பொருளே.’

‘அடிமறி சுண்ணம் நிரல்நிறை விற்பூட்டு
அடிமறி மாற்று வரவும்- துடியிடையாய்
தாப்பிசை தாவில் மொழிமாற்று அளைமறி
பாப்புப் பொருளோடுஒன் பான்.’

முழுதும்

‘பொருள்கோளும் மறிநிலை போல்வன வாம்அவை
யாற்றுநீர் மொழிமாற்று நிரல்நிறை விற்பூண்
தாப்பிசை அளைமறி பாப்புக் கொண்டுகூட்டு
அடிமறி மாற்றுஎன ஆகும்எட்டு என்ப.’
 



வீ.சோ.96 உரைமேற்.














வீ.சோ. 36 உரைமேற்.



நே.சொல்.68

நன்.411





தொ.வி.305