சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

72 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

பெயர் என்றது பொருள். அஃது ஈண்டு ஆகுபெயரான். அதனை உணர்த்தும்
சொல்மேல்நின்றது.

வரலாறு: நிலம்-நீர்- சோறு- கூழ் என்றாற் போல்வன இடுகுறியாய் வந்தன.
குழையன்- நிலத்தன்- கரியன் என்றாற் போல்வன காரணக்குறியாய் வந்தன. பாகன்
இடையன் என்றாற்போல்வன மரபுபற்றி வந்தன. தெங்கு கமுகு என்றாற்போல்வன
ஆக்கம்பற்றி வந்தன. உண்டான்- தின்றான் என்றாற்போல்வன காலம்காட்டிப் படுத்தல்
ஓசையான் வினைமுதல்மேல் நின்ற வினைப்பெயர். உண்டவன்- உண்ணுமவன் என்றாற்
போல்வன காலம் காட்டி ஓசைவேறுபாட்டான் அன்றித் தாமே வினைமுதல்மேல்
வினைப்பெயர்.
 

 

‘கொலைவர் கொடுமரம் தேய்த்தார்’
‘அவன் ஏறிற்றுக் குதிரை’ - என்றாற்போல்வன
 

கலி. 12

காலம்காட்டிப் படுத்தல் ஓசையான் செயப்படுபொருள் மேல்நின்ற வினைப்பெயர். யான்
சொன்னவன், உண்பவை நாழி என்றாற்போல்வன காலம்காட்டி ஓசை வேறுபாட்டான்
அன்றித்தாமே செயப்படுபொருள் மேல்நின்ற வினைப்பெயர். உண்டல் தின்றல்
என்றாற்போல்வன காலம்காட்டாது புடைப் பெயர்ச்சிமாத்திரமே உணர்த்தி நிற்கும்
வினைப்பெயர். பூசல், வேட்டை என்றாற்போல்வன காலம் காட்டலும் புடைபெயர்ச்சி
உணர்த்தலும் இன்றி நிற்கும் வினைப்பெயர் பிறவாற்றான்வருவன உளவேல் அவையும்
கொள்க. ஏனை விகற்பம் எல்லாம் மேல் பெறப்படும்.
 

விளக்கம்
 

இது காறும் பொதுச்செய்தி கூறும் இந்நூற்பா முதலாகப் பெயர் இலக்கணம்
உணர்த்துகின்றார்.