சுண்ண மொழிமாற்று என நாற்சீரடி இரண்டனுள் கொள்ளுவர் தொல்காப்பியனார். ‘சுரையாழ’ என்ற பாட்டினை நான்கடி வெண்பாவாக்கி, ‘கரையாடக் கெண்டை கயமாட மஞ்ஞை’ என்பதனை முதலடியாகத் தமிழ் இலக்கணத் தெளிவு என்றதால் கூறும். “ஒன்றற்கு ஒன்று பொருந்தியது என்பார் ‘ஏற்ற பொருளுக்கு என்றார்; இது பண்டமாற்றுப் போறலின் இரண்டு மொழியும் அவை கொள்ளும் இரண்டு பயனிலையும் வந்தல்லது மொழிமாற்றுதல் கூடாது” என்பது நன்னூல் விருத்தி உரை. |