சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-70723

என்புழி, முடிவனவாகிய பெயரும் முடிப்பனவாகிய வினையும் நிரல்பட வேறு வேறு
நிற்றலின் பொதுமுறை நிரல்நிறை.

‘காதுசேர் தாழ்குழையாய் கன்னித் துறைச்சேர்ப்ப
                    போதுசேர் தார்மார்ப போர்ச்செழிய- நீதியால்
                    மண்அமிர்தம் மங்கையர்தோள் மாற்றாரை ஏற்றார்க்கு
                    நுண்ணிய வாய பொருள்.
இதுவும் அது.

‘களிறும் கந்தும் போல நளிகடல்
                    கூம்பும் கலனும் தோன்றும்’

என்புழி, முடிவனவும் முடிப்பனவும் ஆகிய பெயர்ச்சொற்கள் நிரல்பட நில்லாது மயங்கி
நிற்றலின் பெயர் எதிர் நிரல் நிறை, வினை எதிர் நிரல்நிறை வந்துழிக் காண்க.

‘ஆடவர்கள் எவ்வாறு அகன்றொழிவார் வெஃகாவும்
                    பாடகமும் ஊரமும் பஞ்சரமா- நீடியமால்
                    நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ
                    மன்றார் கலிக்கச்சி மாண்பு’

என்புழி, நிரல்பட நில்லாது முடிவனவும் முடிப்பனவும் ஆகிய பெயர்ச்சொற்களும்
வினைச்சொற்களும் மயங்கி நிற்றலின் எதிர் நிரல்நிறை. பிறவும் அன்ன.
இனி ‘நெறி’ என்றதனானே,

‘காமவிதி கண்முகம் மென்மருங்குல் செய்யவாய்
                    தோம்இல் துகடினி சொல் அமிர்தம்- தேமலர்க்
                    காந்தன் குரும்பை களப மடவாள்கை
                    ஏந்திளங் கொங்கை எழில்’
என்றாற்போலும் எழுத்து நிரல்நிறையும்,

‘வெண்பா முதலாக வேதியர் ஆதியா
                    மண்பால் வகுத்த வருணமாம்- ஒண்பா
                    இனங்கட்கும் இவ்வாறே என்பவால் தொன்னூல்
                    மனம்திட்பக் கற்றோர் மகிழ்ந்து’