சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-70725

‘காமவிதி’ என்ற பாடலில் காவி கண், மதி முகம், மென் மருங்குல் துடி,
செய்யவாய் கனி, காந்தள் கை, குரும்பை கொங்கை- என்ற நிரல்நிறை காண்க.

‘வெண்பா முதலாக’ என்ற பாடலில் ‘வெண்பாமுதலாக’ என்ற தொகையை விளக்கி
வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி எனக்கொண்டு, அந்தணர் அரசர் வணிகர் வேளாளர்
என்ற வருணங்களை நிரலே புணர்த்தவாறு.

எடுத்துக்காட்டுக்கள் பெரும்பாலும் மயிலைநாதர் சொற்றனவே.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘நிரல்நிறை தானே
வினையினும் பெயரினும் நினையத் தோன்றிச்
சொல்வேறு நிலைஇப் பொருள்வேறு நிலையல்.’

முழுதும் -

‘நிரல்நிறை யாம்நிரை நிறீஇய பெயர்வினை
இரண்டும்வேறு அடுக்கி எதிரினும் வைத்த
நிரையினும் பொருளே நேர்தல் என்ப.’

‘பெயரும் வினையுமாம் சொல்லையும் பொருளையும்
நிரல்நிறை யாக நிறுத்திமற்று ஒருபொருள்
நேரும் பொருள்கோள் நிரல்நிறை ஆகும்.’
 



தொல்.சொல்.405
நன்.414


தொ.வி.308




மு.வீ.செய்யுளணி.25
 

பூட்டுவிற் பொருள்கோள்
 

365 எழுவாய் இறுதி நிலைமொழி தம்முள்
பொருள்நோக்கு உடையது பூட்டுவில் ஆகும்.
 

 

இது நிறுத்த முறையானே பூட்டுவில் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது.