இது நிறுத்தமுறையானே அளைமறிபாப்புப் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது. இ-ள்: செய்யுள் ஈற்றினில் நின்ற சொல் இடையினும் முதலினும் சென்று இயைந்த பொருள்கோள் அளைமறி பாப்புப் பொருள்கோளாம் என்றவாறு. எ-டு: ‘தாழ்ந்த உணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன்றித் தளர்வார் தாமும் சூழ்ந்த வினையாக்கை சுடஇழிந்து நாற்கதியில் சுழல்வார் தாமும் மூழ்ந்த பிணிநலிய முன்செய்த வினையென்றே முனிவார் தாமும் வாழ்ந்த பொழுதினே வான்எய்தும் நெறிமுன்னி முயலா தாரே’ எனவரும். 73 |