சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-74731

‘ஆலத்துமேல வாலின் நெடியகுரங்கு, குளத்துளவளை’ எனவும், வங்கத்துச்
சென்றார்வரின், அஞ்சனத்தன்ன பைங்கூந்தல் (உடையாள்) மாமேனி (மேல)
தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட வெண்கோழி முட்டை உடைத்தன பசலை
தணிவாம் எனவும், ‘பாரி பறம்பின்மேல் தண்ணுமைதான் நாணும் தோளாள் நிறன் காரி
விறன் முள்ளூர் வேங்கைவீ, உள்ளூர் உள்ளது (ஆகிய) அலர்ஆரிய மன்னர் பறையின்
எழுந்து இயம்பும்’ எனவும் சொற்கள் கொண்டு கூட்டப்பட்டுப் பொருள் அமைந்தவாறு
காண்க.

ஒத்த நூற்பாக்கள்:
 

  ‘மொழிமாற் றியற்கை
சொல்நிலை மாற்றிப் பொருள் எதிர்இயைய
முன்னும் பின்னும் கொள்வழிக் கொளாஅல்.’

முழுதும்
‘கொண்டுகூட்டு என்ப கொள்பொருட்கு ஏற்ப
இரண்டடி பலவினும் வினைகொள் மொழியே.’

‘யாப்பினுள் பற்பல அடிகளின் நின்ற
இருமொழி களைப்பொருள் ஏற்கும் இடத்துக்
கூறுவ கொண்டுகூட்டு ஆகும் என்ப.’
 


தொ.சொல்.409

நன்.418


தொ.வி.312



மு.வீ.செய்யுளணி.29
 

அடிமறி மாற்றுப் பொருள்கோள்
 

369 அடிமறிச் செய்தி அடிநிலை திரிந்து
சீர்நிலை திரியாது தடுமா றும்மே.
 

 

இது நிறுத்தமுறையானே அடிமறிமாற்றுப் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது.

இ-ள்: அடிமறிமாற்றுப் பொருள்கோளாவது சீர் நின்றாங்கு நிற்ப அடிகள் தத்தம்
நிலையின்திரிந்து ஒன்றன் நிலைக்களத்து ஒன்று சென்று நிற்கும் என்றவாறு.