சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

732 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

எனவே, எல்லா அடியும் யாண்டும் செல்லும் என்பதாம்.

‘மாறாக் காதலர் மலைமறந் தனரே
                    ஆறாக் கட்பனி வரல்ஆ னாவே
                    வேறாம் மென்தோள் வளைநெகி ழும்மே
                    கூறாய் தோழியான் வாழும் ஆறே’
எனவும்,
                    ‘சூரல் பம்பிய சிறுகான் யாறே
                    சூர் அர மகளிர் ஆர்அணங் கினரே
                    சாரல் நாட நீவரல் ஆறே
                    வாரல் எனினே யான்அஞ் சுவலே’

எனவும் சீர்நின்றாங்கு நிற்பப் பொருள் சிதையாமல் எல்லா அடியும் தடுமாறியவாறு
கண்டுகொள்க. பெரும்பான்மையும் நாலடிச் செய்யுட்கண் அல்லது இப்பொருள்கோள்
வாராது என்க.

‘வாரல் எனினே யான்அஞ் சுவலே’ என்புழி, ‘அஞ்சுவலேயான்’ என இறுதிச்சீர்
ஈற்றுஅயல் சீர்வயின் சென்று திரிதலின் சீர்நிலை திரியாது என்றல் பொருந்தாது எனின்,
‘யான் அஞ்சுவல்’ என நின்றாங்கு நிற்பவும் பொருள் செல்லும் ஆகலின் திரிதல்
இன்மையின் பொருந்தும் என்க.

இனி, இவ்வாறு அன்றித் திரிந்து வருவன உளவேல், அவை புறனடையால்
அமைத்துக்கொள்க,
 

  ‘பொருள்தெரி மருங்கின்
ஈற்றடி இறுசீர் எருத்துவயின் திரிபும்
தோற்றமும் வரையார் அடிமறி யான’
 



தொல்.சொல்.408
 
என்ப ஆகலின்.

அஃதேல், பெரும்பான்மையும் யாப்பிற்கே உரிய பொருள்கோள்களை ஈண்டுச்
சொல்ல வேண்டியது என்னை எனின்,