சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-75733

தொடர்மொழி அடிமறிமாற்று ஒழித்த ஏனை ஏழு பொருள்களும் பட வருதலின் ஈண்டுக் கூறினார் என்க.

அறம் செய்தான் துறக்கம்புகும்
                    தாயைக் கொன்றான் நிரயம்புகும்- எனவும்,

அவர் தந்த சோறும் கூறையும் உண்டு உடுத்து இருந்தேம், இவளும் இவனும்
உமையும் உருத்திரனும்- எனவும், தந்தையைக் கண்டு தலையின் வணங்கினான் எனவும்
முறையானே யாற்றுநீர்ப் பொருள்கோளும் நிரல்நிறைப் பொருள்கோளும் பூட்டுவில்
பொருள்கோளும படத் தொடர்ந்தவாறு காண்க. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. 75
 

விளக்கம்
 

இது முழு அடிகளையே இடம் மாற்றி அமைக்கும் பொருள்கோள்: இதன்கண்
ஒவ்வோரடியிலும் பொருள் முற்றி நிற்கும்.

அறம்.........புகும், தாயை........புகும்- யாற்றுநீர்.

அவர்.......இருந்தேம், இவளும்..........உருத்திரனும்- நிரல்நிறை.
                    தாயை...........வணங்கினான்- பூட்டுவில்.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  முழுதும்
‘பொருள்தெரி...அடிமறி யான.’
‘ஏற்புழி எடுத்துடன் கூட்டுறும் அடியவும்
யாப்புஈறு இடைமுதல் ஆக்கினும் பொருளிசை
மாட்சியும் மாறா அடியவும் அடிமறி’
‘அடிமறி மாற்றே அடிபெயர் பொருளவும்
அடிஇடம் மாறினும் அழியாப் பொருளவும்.’
தொல்.சொல். 407
தொல்.சொல்.408


நன்.419


தொ.வி.312