இந்நூற்பா உரை சேனாவரையர் உரையை ஒட்டி அமைந்து, பின் இரட்டுற மொழிதல் என்பதனால் நச்சினாக்கினியர் உரையைச் சுட்டுவது. புலி, பூசை என்ற திசைச்சொற்கள் ஆன் ஈறுபெற்றுத் தமிழ் இயற்சொல்போல வந்தவாறு. ஊர்க்கணக்கனுக்கு ஆண்டுதோறும் வழங்கவேண்டிய வருவாயைக் குயவன் தாராது விடுத்தானாக, அதனால் உள்ளத்தே வெகுளியை மறைத்துக் குயவற்கு ஊறுசெய்தற்காங் காலங்கருதிக் கணக்கன் புறத்தே நட்டு அகத்தே வேர்த்து இருந்தகாலை, ஊருக்கு அண்மையில் அமைந்த காட்டாற்றில் வருநள் கரைபுரண்டுவந்த வெள்ளத்தில், நீர்இல்லாத நிலையில் அவ்வாற்றில் தொலைவில் புல் மேய்ந்துகொண்டிருந்த எருமைகள் எதிர்பாராது வந்த வெள்ளத்தால் அடித்துவரப் |