பட்டு உயிர்நீத்து அவ்வூரை யொட்டிக் காட்டாற்றங்கரையில் ஒதுக்கப்பட்டனவாக, ஓரிரு நாள்களில் அவற்றின் அழுகிய உடல் நாற்றம் ஊராரைப் பெரிதும் அல்லற்படுத்திற்றாக, அவ்வெருமைப் பிணங்களை அடக்கம் செய்வார் யாவர் என்பதனை, அதற்குமுன் அத்தகை நிகழ்ச்சி நிகழந்திலாமையின் ஊர்மக்கள் வரையறுத்தல் இயலாது கணக்கனை அணுகினாராக, குயவன்பால் வஞ்சம் தீர்த்தற்கு அதுவே ஏற்ற வாய்ப்பு எனக் கருதிய கணக்கன் பழைய ஓலை ஒன்றனுள் காட்டெருமை முட்டையை அடுக்கி அமைத்த சூளையிலிருந்து புறப்படும் புகையான் கார்மேகமுண்டாகி மழைபொழிகின்றமையான், காட்டாற்று வெள்ளத்தான் அடித்துவரப்படும் எருமைப் பிணங்களை அடக்கம் செய்தல், இவ்வூர்க் குயவர்க்கு என்றும் கடன்’ என்று எழுதி ஓலைச்சுருளில் இணைத்து ஊரார்முன் படித்துக்காட்டிக் குயவன்பால் தான்கொண்ட வெகுட்சியை மறைமுகமாக வெளிப்படுத்தினான்- என்ற இதன்கண் பொருந்தாக் காரணம் பொருந்தியதுபோல அமைக்கப்பட்டவாறு காண்க.புத்தகம் என்ற அஃறிணைச்சொல் ‘எழுதுவரிக் கோலத்தார்’ என்றாற்போல உயர்திணை முடிபுகொண்டமை விடுகதைக்கண் காணப்படும் என்பது. ‘எழுதுவரிக் கோலத்தார்’ என்ற பாடல் மகளிருக்கும் புத்தகத்திற்கும் சிலேடை அமைய விடுகதையாய் அமைந்தது. மகளிர் தம்தோள்களில் கரும்பு முதலிய கோலங்களாகிய வரிகள் எழுதப்பெறுவர்; பெற்றோர் மணம் முடித்து வைப்பவருக்கு உரிமைமகளிர் ஆவர்; மைதீட்டிய கண்கள் காதணிகாறும் நீண்டிருக்கும் வனப்புடையர்; கணவர்மாட்டுக் காமம் மீ தூருங்காலத்துப் புனல் ஓடும்வழிப் புல் சாய்ந்தாற்போல மடங்கிக் காமம் குறைந்தபின் தலையெடுப்பதால் |