அடியோடு அழிதல் இல்லாத நாணம் என்ற குணத்தால் அடக்கம் உடையராவர்; இன்பம் நுகர்ந்து நாள் தோறும் பெரிதும் விரும்பப்படுவர் என்பது.புத்தகம் பனையோலையில் வரிவரியாக எழுதப்படும் அழகினை உடையது. புத்தகத்தை ஒருவர் மற்றவருக்குக் கொடுத்தால் அஃது அம்மற்றவர் உடைமையாகும். மைபூசிய பனையோலைகள் தொகுதியாகக் கட்டப்பட்ட வடிவில் புத்தகம் இருக்கும். பனை ஏடுகள் முழுதும் கலைந்து போகாதபடி புத்தகம் கயிற்றினால் கட்டப்பட்டிருக்கும். நாள்தோறும் புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் சுவைக்கப்படுவதால் அது பெரிதும் விரும்பப்படும். இச்சிலேடைப் பொருள் திணை திரியினும் விடுகதைக்குப் பயன்படுமாறு காண்க. வேலுக்கு உறை இன்மையின் படைக்கலத்தின் பொதுப் பெயராய் வாளை உணர்த்த ‘வேலோன்’ என்பது வாளா பெயராய் நின்றது. வடமன் முதலியன திசைநிலைக்கிளவியின் ஆயின. இவை நச்சினார்க்கினியர் உரைத்தன: அடியளந்தான்- தாஅய தெல்லாம் (குறள்.610) என்புழி “அடியளந்தான்- வாளா பெயராய் நின்றது” என்றும் ‘வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் குறள்.763 என்புழி ‘வெங்கோலன்’ என்பது ஈண்டு வாளா பெயராய் நின்றது என்றும் பரிமேலழகர் சுட்டியனவும் உட்கொள்ளத்தக்கன. மேலும் நச்சினார்க்கினியர்: ‘தொன்னெறி மொழிவயின் ஆகுநவும்’ என்ற தொடருக்குச் சொல்லிடத்துப் பழைய நெறியான் ஆய்வரும் சொல்லும் என்று பொருள்கூறி, ‘முதுமொழி பொருள் உடையனவும் பொருள் இல்லனவும் என இருவகைப்படும். ‘யாட்டுளான் இன்னுரை தாரான்’ |