சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-76739

என்றது, இடையன் எழுத்தொடு புணராது பொருள் அறிவுறுக்கும் மொழியைக் கூறுதல்
அன்றி எழுத்தொடு புணர்ந்து பொருள் அறிவுறுக்கும் மொழியைக் கூறான் என்னும்
பொருள்தந்து நின்றது’ என்று விளக்கம் தந்தமையும்,

மெய்ந்நிலை மயக்கின் ஆஅ குநவும் என்ற தொடருக்கு ஒருமைப் பொருளால்
கூறவே பன்மைப்பொருள் தோன்றி மயங்கும் மயக்கினான் ஆகும் செய்யுட்களும்- என்று
பொருள் கூறி,
 
  ‘இல்வாழ்வான் என்பான்’
‘தினைத்துணையும்-தேரான் பிறன்இல் புகல்’

‘நட்பு அரண் ஆறும் உடையான்.”’
‘வறியவன் இளமைபோல்’
குறள்.41
குறள்.144

381
கலி.10
 
என்றாற் போல எல்லாம் ஒருமைப்பொருள் கூறிற்றேனும் பன்மைப் பொருளை
உணர்த்தலின் மெய்ந்நிலை மயக்கம் ஆயிற்று என்று விளக்கம் தந்தமையும் காண்க.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  முழுதும்

‘தொன்மொழியும் மந்திரமும் சொற்பொருள் தோன்றுதலின்
இன்மையும் உண்மையுமாய் ஈங்கு.’

‘ஒருதிணைப் பெயர்ஒரு திணைக்காய் வருநவும்
திசைச்சொல் வாய்பாடு திரிந்து வருநவும்
இயைபில் லனஇயைந் தனவாய் வருநவும்
திணைமுத லாயின திரிந்து வருநவும்
அன்றி அனைத்தும் கடப்பா டிலவே.’
தொல்.சொல். 449

நே.சொல்.69






மு.வீ.ஒ.115