தொல்காப்பியனார் பெயர்களின் வகைகளையே பெயரிய கூறிப்போந்தார். பெயரிலக்கணம் வேற்றுமைஇயலில் வேற்றுமைக்கு இலக்கணம் கூறிய வழியே பெரும்பாலும் அமைந்து கிடந்தமையின், மீண்டும் பெயரியலில் அதனைக் கூறுவதற்கு முற்படவில்லை. |
| | ‘கூறிய முறையின் உருபுநிலை திரியாது ஈறுபெயர்க்கு ஆகும் இயற்கைய என்ப.’ | தொல். சொல். 69 |
என்று உருபு பெயர்ப்பின் வருதல் கூறவே, உருபு ஏற்றலாகிய பெயர் இலக்கணமும், |
| | ‘அன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே’. | தொல்.சொல். 66 |
என்று எழுவாய் பயனிலை கொண்டு முடிதல் கூறவே பயனிலை கோடலாகிய பெயரிலக்கணமும் பெறப்பட்டமையின் இயைபுபற்றி, |
| | ‘பெயர்நிலைக் கிளவி காலம் தோன்றா தொழில்நிலை ஒட்டும் ஒன்றலங் கடையே.’ | தொல்.சொல். 70 |
என்று காலம் தோற்றாமையும் வேற்றுமை யியலிலேயே கூறி விட்டார். |
ஒத்த நூற்பாக்கள்: |
| | ‘அவற்றுள், பெயரெனப் படுபவை தெரியுங் காலை உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும் ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும் அம்மூ உருபின தோன்ற லாறே.’
‘இருதிணைப் பிரிந்த ஐம்பால் கிளவிக்கும் உரியவை உரிய பெயர்வயினான.’ |
தொல். சொல். 160
தொல்.சொல். 161 |