சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-1875

 ‘ஒருவன் ஒருத்திஒன் றாம்சிறப் பொடுபல் லோர் பலவைக்
கருது முறையிற் கலப்பன வேற்றுமைகாண்.’
‘ஒருவன் ஒருத்தி பலர்ஒன் றொடுபல வும்சிறப்பின்
உருபுகள் மூன்றும் உடன்வைத்துப் பின் எட்டு வேற்றுமையும்
மருவ நிறுவி உறழ்தர ஆம்கா ரகபதங்கள்
உருவு மலியும் அறுபத்து நான்குள ஒண்டொடியே’.
‘..... ..... ..... ...... ...... பெயர்ச்சொல்
உயர்திணைப்பேர் அஃறிணைப் பேர் ஒண் விரவுற்று
இயலும் எனஉரைப்பர் ஈங்கு’.
‘இடுகுறி காரண மரபோடு ஆக்கம்
தொடர்ந்து தொழிலல காலம் தோற்றா
வேற்றுமைக்கு இடனாய்த் திணைபால் இடத்து ஒன்று
ஏற்பவும் பொதுவும் ஆவன பெயரே.’
வீ.சோ. 30



வீ.சோ. 31


நே.சொல்.30




நன். 275
(விருத்திகாரர் மரபுப்பெயர் ஆக்கப்பெயர் என்பன தனியே இல்லை என்று மறுத்து,
இடுகுறி மரபு இடுகுறி ஆக்கம், காரணமரபு காரணஆக்கம் என்ற பகுப்புக்களை வலிந்து
கொள்வர்.)
 ‘பெயரே வேற்றுமை பெற்றுஇடம் பால்திணை
காட்டித் தொழில்அல காலம் காட்டா
மரபு காரணம் ஆக்கம் குறியென்று
அவைநால் தகுதி ஆகும் என்ப.’

‘காரணம் இல்லன மரபுப் பெயரே
காரணம் காட்டிக் காரணம் பயன்கொளல்
காரணப் பெயரே காரணம் காட்டாது
அதன்பயன் கொள்வது ஆகு பெயரே
காரணம் காட்டினும் காரணப் பயன்கொளா
இடுகுறிப் பெயராம் என்பகற் றோரே.’



தொ.வி. 53






54