சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

76 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

 ‘அவற்றுள்
பெயரெனப் படுபவை தெரியுங் காலை
உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும்
ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்
ஆகும் என்மனார் அறிந்திசி னோரே.’




மு.வீ.பெ.4
 

ஆண்பாற் பெயர்
 

177அவற்றுள்
கிளைஎண் குழூஉமுதல் பல்பொருள் திணைதேம்
ஊர்வான் அகம்புறம் முதல நிலன்யாண்டு
இருது மதிநாள் ஆதிக் காலம்
தோள்குழல் மார்புகண் காது முதல் உறுப்பு
அளவு அறிவு ஒப்பு வடிவு நிறம் கதி
சாதி குடிசிறப்பு ஆதிப் பல்குணம்
ஓதல் ஈதல் அதில் பல்வினை
இவற்றொடு சுட்டு வினாப்பிற மற்றை
யுற்றனவ் வீறு நம்பி ஆடூஉ
விடலை கோவேள் குரிசில் தோன்றல்
இன்னன ஆண்பெயர் ஆகும் என்ப.
 
 

மேல் ‘ஒன்றற்கு ஏற்பவும்’ என்றவற்றுள் இஃது ஆண்பாற்கு உரிய பெயர் ஆமாறு
கூறுகின்றது.

இ-ள் மேற்கூறிய பெயர்களுள் நால்வகைக் கிளையும் எண்ணும் குழுவும் முதலிய
பல்பொருளும், ஐந்திணையும் தேயமும் ஊரும் வானும் அகமும் புறமும் முதலிய நிலனும்
யாண்டும் பருவமும் திங்களும் நாளும் முதலிய காலமும் தோளும் குழலும்
மார்பும்கண்ணும் காதும்முதலிய உறுப்பும் அளவும் அறிவும் ஒப்பும் வடிவும் நிறமும்
கதியும்சாதியும் குடியும் சிறப்பும் முதலிய பண்பும், ஓதலும் ஈதலும் முதலிய தொழிலும்
ஆகிய இவ்வறு வகையினையும் வினாவினையும் பிற என்பதனையும் மற்றை
என்பதனையும் பொருந்திவரும் னகரஈற்றுப்