பெயர்களும், நம்பி- ஆடூஉ- விடலை கோ- வேள்- குரிசில்- தோன்றல் என்னும் தம்மை உணர நின்ற பெயர் ஏழும் இவைபோல்வன பிறவும் ஆகிய பெயர்களும் ஆண்பாற்கு உரிய பெயர்களாம் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.ஆண்பால் எனவே, உயர்திணை என்பதூஉம் ஒருமை என்பதூஉம் தாமே விளங்கும். மேல்வருவனவற்றிற்கும் இவ்வுரை கொள்க. வரலாறு: தமன்- நமன்- நுமன்- எமன் எனவரும் இத்திறத்தன நான்கும் கிளைப்பெயர்; தம்மாள்- நம்மான்- நும்மான்- எம்மான் இவையும் அன்ன. ஒருவன் என்பது எண்இயற்பெயர். அவையத்தான் - அத்தி கோசத்தான் என்றாற்போல்வன குழூஉப்பெயர்; இளந்துணை மகார் தம்மில் கூடி விளையாடல் குறித்த பொழுதைக்குத் தாமே படைத்து இட்டுக்கொண்ட பட்டிபுத்திரன் - கங்கமாத்திரன் என்றாற் போலும் ‘கூடிவருவழக்கின் ஆடியற்பெயரும்’ அன்ன. பொருளன் - பொன்னன் - முடியன் என்றாற்போல்வன பொருட்பெயர். இவைஎல்லாம் பொருள்பற்றி வந்தன வெற்பன் - பொருப்பன் - சிலம்பன் - கானவன் - குறவன் எனவும், எயினன் - மறவன் எனவும், நாடன் - பொதுவன் - அண்டன் - ஆயன் எனவும், மகிழ்நன் - ஊரன் - வினைஞன் - களமன் எனவும், சேர்ப்பன் - துறைவன் - பரதன் - நுளையன் எனவும், அருவாளன் - சோழியன் எனவும், அம்பர்கிழான்- பேரூர்கிழான் எனவும், கருவூரான் - கூடலான் - உறையூரான் - எனவும்; வானான்- அகத்தான்- புறத்தான் எனவும், வரும் இத்திறத்தன எல்லாம் இடம்பற்றி வந்த இடப்பெயர்; ஈராட்டையான் - மூவாட்டையான், எனவும், வேனிலான் - காரான், எனவும், தையான் - மாசியான் எனவும், ஆதிரையான் - ஓணத்தான் எனவும், நெருநலான் - இற்றையான் எனவும் வரும் இத்திறத்தின எல்லாம் கரலம்பற்றி வந்த காலப் |