‘அந்தணன் நாறும் ஆன்பால் அவியினை அலர்ந்த காலை நந்தியா வட்டம் நாறும் நகைமுடி அரசன் ஆயின் தந்துயாம் உரைப்பின் தாழைத் தடமலர் வணிகன் நாறும் பந்தியாப் பழுப்பு நாறின் சூத்திரன் பாலது என்றான்’ சிந்.294 என்ற சிந்தாமணிப் பதுமையாரிலம்பகப் பாடலான் உணரப்படும். பின்னுள்ளோரை ஒட்டி வேள்-விடலை என்பன ஆண்பாற்பெயர் என்றாரேனும், விடலை முதலியன பொதுப்பெயராம் என்ற சேனாவரையர் முதலாயினார் கருத்தும் இவருக்கு உடன்பாடாதல் பின்னர்க் குறிக்கப்படும். |