இது பெண்பாற்கு உரிய பெயர் ஆமாறு கூறுகின்றது.இ-ள்: மேல் கிளை முதலாகக் கூறப்பட்ட பொருட்பகுப்புகளுள் ளகர ஒற்றிற்கும் இகரத்திற்கும் பொருந்திய ஈற்றின் வருவனவும், தோழி- செவிலி- மகடூஉ- நங்கை- தையல் என்னும் தம்மை உணரநின்ற பெயர் ஐந்துடனே அவை போல்வன பிறவும் பெண்பாற்கு உரிய பெயர்களாம் என்றவாறு. ‘ஏற்ற ஈற்றவும்’ என்றார், ளவ்வொற்று ஏற்பனவும், ஓகரம் ஏற்பனவும், இரண்டும் ஏற்பனவும், இரண்டும் ஏலாதனவும் உள என்றற்கு. வரலாறு: தமள் - நமள் - நுமள் - எமள் - எனவும், தம்மாள் நம்மாள் - நும்மாள் - எம்மாள் எனவும், அவையத்தாள் - அத்திகோசத்தாள் எனவும், பொருளாள் - பொன்னாள் - முடியாள் எனவும் இவ்வாறே னகர ஈற்றை ளகர ஈறாக ஏற்பன அறிந்து ஒட்டுக. ஒருத்தி - குறத்தி - எயிற்றி - மறத்தி - ஆய்ச்சி - உழத்தி - பரத்தி - அருவாட்டி - சோழிச்சி பேரூர்கிழத்தி - அம்பர்கிழத்தி - பழையனூர் உடைச்சி - அரசூருடைச்சி - மானுடத்தி - தேவி - நரகி - பார்ப்பனி - வாணிச்சி - வெள்ளாடிச்சி- படைத்தலைவி- சேனா- கணக்கச்சி- தச்சிச்சி என்றாற்போல்வன இகரம் |