ஏற்றன. திணிதோளாள் திணிதோளி- சுரிகுழலாள் சுரிகுழாள்- கூனாள்- கூனி என்றாற்போல்வன அவ்விருவகையும் ஏற்றன. வெற்பன்- பொருப்பன் என்றாற்போல்வன அவ்விருவகையும் ஏலாதன.தோழி முதலிய ஐந்தும் தனிப்பெயர். ‘இன்னன’ என்றதனானே, பெண்டாட்டி- பெண்மகள்- மகள்-பெண்டு- இகுளை- பாங்கி- பேதை - பெதும்பை முதலியனவும், நாணுவரை இறந்து புறத்து விளையாடும் பருவத்துப் பெண்மகன் என வருவதூஉம், பிறவும் கொள்க. |
| ‘ஊரார் பெண்டுஎன மொழிக என்னை’ ‘நின்- பெண்டெனப் பிறர்கூறும் பழிமாறப் பெறுகிற்பின் | ஐங்குறு- 113 கலி.77 |
எனச் செய்யுட்கண்ணும் பெண்டு வருமாறு காண்க. |
விளக்கம் |
| ஒருத்தி -- எண்ணியற்பெயர். குறத்தி முதலிய ஐந்தும் திணை பற்றியபெயர். அருவாட்டி, சோழிச்சி - தேயம் பற்றியபெயர். பேரூர்கிழத்தி முதலிய நான்கும், ஊர் பற்றியபெயர். மானுடத்தி முதலிய மூன்றும் கதிபற்றிய பெயர். பார்ப்பனி முதலிய நான்கும் சாதிபற்றிய பெயர். படைத்தலைவி, சேனாவரசி - சிறப்புப்பற்றிய பெயர். கணக்கச்சி, தச்சிச்சி - தொழில்பற்றிய பெயர். திணிதோளாள் முதலிய ஆறும் - உறுப்புப்பற்றிய பெயர். தமள் முதல் முடியாள் ஈறாவன - ளகரஒற்று ஏற்பன. ஒருத்திமுதல் தச்சிச்சி ஈறாவன - இகரம் ஏற்பன. திணிதோளாள் திணிதோளி முதலிய மூன்றும் இரண்டும் ஏற்பன. | |
பெண்டாட்டி என்ற சொல் பொதுவாகப் பெண்பாலைக் குறிப்பது. பெண்மகன் என்னப்பேதைப்பருவத்துப் பெண்ணை மாறோகத்தார் அழைத்தனர். |