சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-20, 2183

ஒத்த நூற்பாக்கள்:
 

  முழுதும்
‘உரைத்த குடிமுதல் உற்ற ளகார
ஈற்றவும் இகர இறுதிக் கிளவியும்
அத்திணைப் பெண்பால் படர்க்கை ஆகும்.’

‘தையல் மகடூஉ நங்கை செவிலி
தோழியும் அதன்பால என்மனார் புலவர்.’
 
நன் 277


மு.வீ.பெ.21


22
 

பலர்பாற் பெயர்
 

179 கிளந்த கிளைமுதல் உற்ற-ர-ஈற்றவும்
கள்என் ஈற்றின் ஏற்பவும் பிறவும்
பல்லோர் பெயரின் பகுதி ஆகும்.
 

இது பலர்பாற்கு உரிய பெயர் ஆமாறு கூறுகின்றது.

இ-ள்: மேல் கிளை முதலாகக் கூறப்பட்ட பொருட் தகுதிகளைப் பொருந்திவரும்
ரகரஒற்றை ஈறாக உடைய சொற்களும், அவற்றுள் கள் என்னும் விகுதியை ஈறாக
உடைய சொற்களின் ஈண்டைக்குப் பொருந்துவனவும், அவைபோல்வன பிறவும்
பலர்பாற்கு உரிய பெயரின் திறனாம் என்றவாறு.

வரலாறு: தமர்- நமர்- நுமர்- எமர்- ஒருவர்- இருவர்- முப்பத்துமூவர் என னகர
ஈற்றை ரகர ஈறாக்கிக் காண்க. அடிகள்- முனிகள்- மனுக்கள்- கோக்கள்- வேள்கள்-
விடலைகள்- வில்லிகள்- வாளிகள்- கணிகள்- மடந்தைகள்- பரத்தைகள்- உழத்திகள்-
மறத்திகள் என்றாற் போல்வன கள் ஈற்றுள் ஈண்டைக்கு ஏற்பன. ‘பிற’ என்றதனானே,
மாந்தர்- மக்கள்- மகார்- சிறார்- எல்லாரும்- தந்தையார்- தாயார்- பெருங்காலர்-
பெருந்தோளர்- பட்டிபுத்திரர்- கங்கமாத்திரர்- பண்டிர்- பெண்டுகள்- மடந்தையர்-
வேளிர் என்றாற் போல்வன பிறவும் கொள்க.