பொருள் இடம் காலம் சினை பண்பு தொழில் பற்றி வந்த பலவின்பாற் பெயர்கள் அன் சாரியை இடையே பெற்றும் பெறாதும் வந்தமைக்கு எடுத்துக்காட்டு. இவை அகர ஈற்றுப் பலவின்பாற்பெயர்.
அவ் முதலிய மூன்றும் வகர ஈற்றுப் பலவின்பாற்பெயர். ஆக்கள் முதலியன. பன்மையைக்குறிக்கும் கள்ளீறு பெற்றன. இரண்டு முதலிய எல்லாஎண்ணும் பலவின்பாற்பெயர். உள்ள முதலிய எட்டும் தம்மை உணர்த்தின. ‘பிற’ என்பதனான், யா முதலிய பத்தும் கொள்ளப்பட்டன. | ஒத்த நூற்பாக்கள்:
| | ‘அதுஇது உது என வரூஉம் பெயரும் அவைமுத லாகிய ஆய்தப் பெயரும் அவைஇவை உவைஎன வரூஉம் பெயரும் அவைமுத லாகிய வகரப் பெயரும் யாதுயா யாவை என்னும் பெயரும் ஆவயின் மூன்றோடு அப்பதி னைந்தும் பாலறி வந்த அஃறிணைப் பெயரே.’
‘பல்ல பலசில என்னும் பெயரும் உள்ள இல்ல என்னும் பெயரும் வினைப்பெயர்க் கிளவியும் பண்புகொள் பெயரும் இனைத்தெனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயரும் ஒப்பின் ஆகிய பெயர்நிலை உளப்பட அப்பால் ஒன்பதும் அவற்றோ ரன்ன.’ ‘கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழி உடைய பலஅறி சொற்கே.’ | தொல்.சொல். 167
168
169 |
|
|
|