| ‘அன்ன பிறவும் அஃறிணை மருங்கின் பன்மையும் ஒருமையும் பாலறி வந்த என்ன பெயரும் அத்திணை யவ்வே.’
‘ஆதியினில் சுட்டாம் உகரஐ காரப்பேர் ஓதியஎண் ணின்பேர உவமைப்பேர்- தீதிலாச் சாதிப்பேர் சார்ந்த வினா உறுப்பின் பேர்தலத்தோர் ஓதிய அஃறிணைக்காம் உற்று.’
‘பாங்கார் பெயர்வினை கொண்டன்றிப் பால்தோன்றா ஆங்கு விரவுப்பேர் அஃறிணைப்பேர்- ஓங்கிய கள்ளொடு வந்தால் இருதிணைக்கும் பன்மைப்பால் ஒள்ளிழையாய் தோன்றலும் உண்டு.’
முழுதும் - ‘இன்னவும் பிறவும் பலவின் பெயரே’ ‘இன்னவும் பலவின் பெயரா கும்மே’ ‘ஒன்று து- உறின் அன் ஐயும் பலவின்பால் ஈறும் கள்ஈறும் மற்றவை’
‘வகார இறுதியும் வைஇறு மொழியும் கள்என் இறுதியும் கணக்கும் பிறவும் அத்திணைப் பலவின் படர்க்கைப் பெயரே.’
‘பல்ல பலசில என்னும் பெயரும் உள்ள இல்ல உளஇல என்னும் பெயரும் அத்திணைப் பலவின் மேன.’ | 170
நே.சொல்.33
நே. சொல்.37
நன்.280 என்ற தொடர் என்று நன்னூலில் உள்ளது
தொ.வி.80
மு.வீ.பெ.25
26 |