இ-ள்: கள்ளொடு சிவணாமையின் பால் வரையப்படாது நின்ற அஃறிணை இயற்பெயர்கள் அத்திணை இருபாற்கும் பொதுவாய் நிற்றலை உடைய என்றவாறு. வரலாறு: ஆ வந்தது வந்தன, குதிரை வந்தது வந்தன ஒன்று பல, குதிரை ஒன்று பல எனவரும். 24 |
விளக்கம்
|
பழந்தமிழில் அஃறிணை இயற்பெயரே ஒருமை பன்மை இரண்டையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. அஃறிணை இயற்பெயர்கள்ளொடு சேர்ந்தவழிப் பன்மைக்கே உரியது ஆகும் என்ற விதியிருப்பினும், கள்ளொடு சிவணுதலை மிக அருகியே காணலாம் தொல்காப்பியனாரும் தம் நூற்பாவில் |
| ‘நெட்டெழுத் திம்பர் ஒற்றுமிகத் தோன்றும் அப்பால் மொழிகள் அல்வழி யான’ | தொல். 196 |
எனக் கள்ளீற்றை அருகியே வரப் பயன்படுத்தியுள்ளார்.கள்ளொடு சிவணாதவழி ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் நின்ற அஃறிணை இயற்பெயர் இக்காலத்துப் பெரும்பாலும் ஒருமையே குறித்தல் காண்க. |
ஒத்த நூற்பாக்கள் |
| ‘தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர் ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே.’
முழுதும் - ‘அன்றியும் இருமைக்கு அஃறிணைப் பொதுவே.’
‘பாங்கார் பெயர்வினை கொண்டன்றிப் பால்தோன்றா ................அஃறிணைப்பேர்.’ | தொல்.சொல்.171
நன். 281 தொ.வி. 80
நே.சொல்.37 |